Tuesday 31 July 2018

சிரிப்பு...

வெளிகாட்டா இமைகளும்,
விலகாத விழிகளும்,
நிறம் ஏற்கும் நெற்றியும்,
பேசும் புருவமும்,
இவைக்கு எல்லாம் அழகு சேர்த்து,
உன் நினைவில் நித்தமாய் இருக்க செய்யும்
உன் சிரிப்பிக்கு
நான் அடிமை...

Friday 13 July 2018

பெண்மை....!!!

ஆகாயம் விழித்திட - அவளை
இவள் வரவேற்றிட,

சுள்ளிகள் சேர்த்து,  வெந்நீர் எடுத்து - செல்வ
செல்விகளை சீராட்டி,
எட்டாக் கனியாய் கல்வி பயில - பள்ளி
சென்று சேர்த்து,

தான் வாடினால் கேட்பாரில்லை எனினும் - பூ
வாடினால் பனம் இல்லையேல் என்பதனால்,
குடை கீழ் அமர்ந்து - வேலை
பார்த்து,

மொழம் அளந்து ஜான் விட்டு - விற்று
சேர்த்த பனம்,
தண்ணீர் பருகி , உணவு தவிர்த்து - விரியம்
ஆகாமல் சேர்த்து,

வரவேற்ற சூரியனோ வீடு திரும்ப - நிலவயும்
வரவேற்க காத்துகிடந்து,

தெரு விளக்கோ கன்சிமிட்டிட - கவனம்
குன்றாது பூக்களை கோர்த்து எடுத்து,

விருந்தோம்பலாய் கருனையுடன் - இவளை குளிர்விக்க மழை பொழிய,
இதை அறியாதவள் - பூக்கள்
அழுகாது சேர்த்து எடுத்து வீடு திரும்பினால்,

மறுதினம் சூரியனை
வரவேற்றிட..

                                                    - பெண்மை...

பினைப்பில் இருக்கிறேன்...!!!!

பேசிராத சொற்களால்,
சிந்தனையில் இருந்தவன்...
பேசிய சொற்களுடன்,
பினைப்பில் இருக்கிறேன்...!!!!

Sunday 1 July 2018

உதிரம்...!!

உதிரம் சிந்தும்
மூங்கிலாய் நான்......
புல்லாங்குழலை அவள்
இசைப்பாலாயின்,

என் கண்ணீர் மறைக்கும்
மழைத்துளி,
அவ் இசைக்கு
சுதி சேர்கட்டும்....

என் உதிரமும்
உரைய கண்டேன்,
என்னவள் இசையில்...