Monday 25 March 2019

வேண்டும்....

உன் இதழ்கள் சிரித்திட வேண்டும்,
அதன் காரணம் நானாக வேண்டும்.
உன் கண்கள் பேசிட வேண்டும்,
அதன் மொழி நானாக வேண்டும்.
உன் பிடிவாதம் தொடர்ந்திட வேண்டும்,
அது என்னுடன் மட்டுமே வேண்டும்.
உன் கனவுகள் மெய்ப்பட வேண்டும்,
அதை நானே நிறைவேற்ற வேண்டும்.
உன் வாழ்க்கை நீண்டிருக்க வேண்டும்,
அதில் முழுதும் நானே வேண்டும்.