Wednesday, 5 November 2025

என் அரசனே

அரசனே 
என் அரசனே 

ஆராரோ பாடுகிறேன் 
என் அரசனே 
என் மடியில் துயிலுறங்கு 

இன்பத்தில் நான் திழைக்க 
என் அரசனே 
உன் புன்னகையில் 
என் இதயம் தொடு

ஈகையில் நாம் சிறக்க 
என் அரசனே 
உன் கரம் கொண்டு 
செல்வம் கொடு 

உறவு எனும் படை இருக்க 
என் அரசனே 
படை கொண்டு வென்று எழு  

ஊக்கம் உனக்கென வளர்த்து 
என் அரசனே 
ஊரார் போற்ற வாழ்ந்து காட்டு 


எழுந்து நின்றாய் தத்தி தத்தி 
என் அரசனே 
என் கரம் பிடித்து 
நடை பழகு 

ஏக்கம் இன்றி வளர்க்கிறேன் 
என் அரசனே 
ஏழு கடல் கடந்து செல் 

ஐயம் கொல்லாதே 
என் அரசனே 
துணிவுடன் செயல் ஆற்று 

ஒழுக்கம் எனும் உணர்வை 
என் அரசனே 
உயிருடன் கலந்து வாழ் 

ஓவியம் போல் ஒரு வாழ்வை 
என் அரசனே 
நீ பெற
ஓம் எனும் நாமம் நாடு 

ஒளவியம்  எனும் பண்பு 
என் அரசனே 
பிறரிடம் பாராதே 

Saturday, 1 November 2025

ஊஞ்சல்

என் மடி அமர்ந்து,
என் கரம் பிடித்து,
தலை சாய்த்து,
காற்றின் தாலாட்டில்,
நிலவொளியில் கலந்து,
மகிழடி,
மழலையே..
            ஊஞ்சல்

Sunday, 27 July 2025

வாழ்க்கை

அனைவர்க்கும் இசைபடும் வாழ்வும் இல்லை,
அனைவர்க்கும் தீமை செய்ய வாழ்வும் இல்லை

Wednesday, 13 December 2023

கால மாற்றம்

அரசியல் பழகிகொள் 
அதிகார வலிமை அறிந்துகொள்

இன்பம் தழைத்து நிற்கும்
இடையூரும் இணைந்து நிற்கும்

சூழ்நிலையின் கால மாற்றம்
மனிதர்களின் எண்ணங்களை மாற்றும்

கிடைத்ததை ஏற்றுக்கொள்
கிடைகாதவை நமக்கில்லையன அறிந்துகொள்

எதிர்பாராத உதவிகள் கிட்டும்
வாழ்நாள் முட்டும் நிலைக்கும்

நன்றி மறவாதே 
வாழ்கை நிலைக்காதே

மனம் ஏற்க மறுக்கும்
ஏற்றால் வாழ்கை சிறக்கும்

Saturday, 1 July 2023

கடவுளின் சித்தம்

அரியாமல் நிகழவில்லை - அதை
         நான் அறிவேன்
ஆறுதல் பேசி பயனில்லை -
          பயன் அறிந்ததே
இன்னல்கள் இருப்பினும் - அவை
         கணிக்கட்டவையே   
கணிப்புகள் கை மீறியதா? - 
         கடவுளின்  சித்தம்!!

Tuesday, 5 October 2021

அலையோசை

உன் தலை கோத துடித்தேன், 
பாதம் சேர பாய்ந்தேன், 
என் தவம் அறியா தாய்மை
உனை தூக்கிச் செல்ல! 
கரை தொட்டு மடிந்தேன்
மழலை செல்லமே.! 

Thursday, 30 September 2021

வறுமை

கதிரவன் வெப்பத்தில் பழகிய தேகம், 
சந்திரன் குளிருக்கு ஒவ்வாமல் போனது. 

உழுது விதைத்து வாடிய மனதிற்கு, 
களைப்பாற கருவேல மரமே மிஞ்சியது. 

ஆடு வளர்க்க அடகு வைத்து, 
தண்ணிர் வைக்க தேடி திரிந்து, 
தீராத தாகம், 
வறுமையின் உச்சம். 

நம்பிக்கையின் நன்முகத்தோடு கரம் பிடித்தேன், 
மஞ்சள் கயிற்றின் ஆடம்பரமும், 
சாந்து பொட்டு சீதனமும், 
ஒற்றை கண்ணாடி வளைவி அலங்காரமும், 
வறுமையின் மிச்சம். 

வானம் பார்த்த பூமியை
நீல வானம் பார்க்கும்  வரை, 
வறுமையின்றி 
வேறு வழியில்லை.