கூப்பிட்டு விடாத உறவாய் செலவு
வந்து சென்றால் சுகம்
வந்த வண்ணமே இருக்கையால் சட்ரே சிரமம் .
நம்பிக்கையை நிலைகுலைத்த நட்பினால்
நிம்மதி துலைத்தேன் , நம்பிக்கை யாலனை
நினைப்பதே தவறென்று உணர்ந்தேன் , நிம்மதியை
பெறுவதற்குகு அல்ல ,அந்த நல்லவன்
நம்பிக்கைக்கு தகுதி அல்லாததுனால் .
ஆண் பெண் உறவு
உறவில் விரிசல் , உறவின்
உறவுகளால் , வலியோ உறவுக்கு.
நினைப்பவை நடந்துவிட்டால் – சுவாரசியம்
அற்ற வாழ்க்கை
இதன் எதிர்மறையோ – சலிப்பான வாழ்வு
சுவாரசியமோ சலிப்போ , சிந்தனையாகவே தொடரட்டும்
இல்லையேல் சங்கடமே .
உறவுகளுடன் உரையாடல் உன்னதம்
கவலை நதியின் உப்பு நீர் வெள்ளத்தில்
அக்கறையை அடைய இயலாமல் , ஒரு உறவு
காத்திருப்பு வடியும் வரையிலா,கரடாகும் வரையிலா
உறவுக்கும் தெரியவில்லை
உப்புநீர்க்கும் விளங்கவில்லை .
உறவுகளுக்கு தன்
உள்ளத்தை
உணர்த்தும் ஒரு
உன்னதம் கண்ணீர்.
சிதைவதுவும் கரைவதுவும் .......
வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய உள்ளம்,
இன்றோ பல உள்ளங்களில் மட்டுமே
வாழ ஆண்டவனின் செயல்.
வாழ்க்கை விளையாட்டை
விளையாட அழைத்தவன்
வாய்ப்பை தன் வசமே வைத்து கொள்ளும்
காலம் ,
சற்றே சிந்திக்க வேண்டிய தருணம் .
சிந்தனையின்
சிறதுளிகள் .........................................................................