Friday, 9 September 2016

விழியோற தூறல்.

பாடலாய் தென்றல்,
இசைக்கின்ற கதவுகள்!
பாடலின் கவியாய் என் வாழ்நாள் தோழி,  
கவியில் கண்ட காவியத்தில் இருந்து  சிலவறிகள்  ...............

கவியில் தினறிய தென்றல் மேலெழ,
மேலிருந்த தென்றல் தன்னிலை மாறி
உனை சேற தூறலாய் கீழிறங்க,

முதல் துளி என்மேல் விழ,
மேலும் குமுறிய தென்றல்
மழையாய் பொழிய,
மூச்சுக் காற்றை குடையாக்கினேன்.

குடையில் குதித்து,
தறையில் மடிந்த மழைத்துளி ,
மணமகள் பாதம் சேற ,
மீண்டும் உயிர் பெற்று
துள்ளி குதித்தது .

கண்ணீர் வடித்து......
கண்ணீர் வடித்து!!!!
தன்னிலை இழந்த தென்றலுக்கு
பூமகள் பாதம் சேற பிறப்பில்லை .

முடிவில் என்னவள் பாதத்தில் உயிர்பெற்றது,
என்னவளின் வாழ்(நாள்)க்கை தோழனின்

விழியோற தூறலில்.