Tuesday, 27 June 2017

நீ வருடும் மெய்...

பிறர் மனம் நோகாமல்,
நீ கூறும் பொய்யும்
காதலடி.

என் மனம் வருந்தும்
நீ வருடும் மெய்யும்
காதலடி..

இரு  மனம் வருடும்,
உன் மனம் மலரும்,
வரம் ஒன்று தருவாய்..

Saturday, 3 June 2017

காவியக் கிருக்கன்.......

பார்த்த கனம் பிடித்து போவது காதல் எனில்,
மனதில் ஓவியமாய் தன்னவளை வரைந்து,
தன் உயிரில் ஒரு பகுதி பிரித்தளித்து,
தன்னவளுடன் தனிமையாய் வாழ்வதாய் பாவித்து,
வாழும் பொய்யான மெய் வாழ்க்கை,
ஓர் உயிர் ஓவியம்....

காதலை வெளிப்படுத்தும் உணர்வு சொற்களும்(மௌனம்),
உணர்விற்காக ஏங்கி தவிக்கும் மழலை உள்ளமும்,
முடிவிலா உயிர் காவியம்...

ஓவியம் அற்று,
காவியம் எழுத துடிக்கும்...
காவியக் கிருக்கன்!!!!