Saturday, 9 September 2017

சொர்க்கத்தை தேடி

தினம் தினம் உன் நினைவில் பயணித்த எனக்கு,
ஏனோ வாழ்நாள் பயணம் செல்லும்
பாக்கியம் அமையவில்லைடி..

உன் நினைவில் சிரிக்கும் எனக்கு
உன் சிரிப்பில் சிலாகிக்கும் சுழல்
அமையவில்லைடி

உனை பற்றிய நினைவுகள்
என்னுல் நிஜமாய் மாறும்
நிகழ்வே நேராமல் போனதடி...

நண்பர்களுடன் கன நேரமும் உன்னை பற்றி பேசியிருக்கிறேன்
இன்று உன்னை பற்றி பேச
வெறுமை நினைவகள் மட்டுமே மிஞ்சியதடி...

உன் தோள் சாய்ந்து நான் பேச நினைத்த பல உணர்வுகள்
ஏனோ என்னுடனே தனிமையில்
தோற்றுவிட்டதடி......

ஒரு காதல் கொண்ட பல பார்வையும்,
பல அர்த்தம் கொண்ட ஒரு பார்வையையும்,
சந்திக்க என் இரு விழிகளுக்கும்
வாய்ப்பு மறுக்கப்பட்டதடி...

உன்னை கட்டி அனைக்க துடத்த என் கரங்கள்
செயலிழந்து துடிக்குதடி.....

நம் சக இன்ப தன்பங்களிள்
உணர்வை வெளிப்படுத்த வேண்டிய கண்கள்
பிரிவினால் கதறுதடி.......

சமுதாயம் எனும் சாக்கடையை
காரணம் காட்டி,
பன்பில் கௌரவம் காணாது
அன்பில் கௌரவம் கொண்டு,
உனக்கு பூவுலக நரகத்தை விட்டு
வானுலக சொர்கம் சேற
வாய்ப்பலித்த,
கௌரவ கொலையாளர்களுக்கும்
அன்பில் கௌரவம் கானும் மூடர்களுக்கும்,
கர்வத்துடன் நரகத்தில் விட்டு வரும் வரிகள்
சொர்க்கத்திலும் உனை தேடி.!!!!!!