உறவுகளின் மீதான நம்பிக்கை,
நம்பிக்கை யின் பிடியில்
நாட்கள் கடந்தன...
பிடிகள் விலக விலக,
மனம் இருக இருக..
நாட்கள் கழிந்தன...
உறவுகள் ஒதுங்கி நிற்க,
உறவாய் கிடைத்த நட்பும்,
தமக்கென பாராது,
தனக்கென சிந்தித்து செல்ல...
நாட்கள் செல்ல செல்ல,
மனம் மெல்ல மெல்ல,
மாற்றம் அடைந்தது....
உறவின் பயணத்தின் பல நிருத்தங்கள்,
உரைத்தது எனவோ ஒன்றே...
அதை ஏற்க நினைக்க மறுத்தது
எனவோ தவறே....
இனி பயணிக்க நிறுத்தங்கள் இல்லை என்பதும்,
கடந்து வந்த நிறுத்தங்கள் தனக்கு சொந்தமில்லை என்பதும்....
நினைவுகள் நிறைந்த பயணமே தவிர,
நிஜங்கள் நிறைந்தவை அல்ல,
என்பதை ஏற்க மறுத்த
மனது தவறோ...?
தவறுகள் தவறே என்று உணர்ந்த நாள்,
தனக்கென வாழும் சமுதாயத்தில்,
பயணம் தொடர்ந்தேன்,
தன்னம்பிக்கையுடன்....
தனிமையாய்..
வாழ்க்கையை நான் அறிய
எனை விட்டு,
ஒதுங்கி நிற்கும்,
உறவுகளுக்கும்,
நட்பிற்கும்,
மிக்க நன்றி.........