Wednesday, 30 May 2018

தயக்கத்தின் காரணம் என்னவோ?

தொலைவில் இருந்தால்
உனை தேடும் மனது,
அருகில் இருந்தால்
சற்றே தயங்குதடி..

கேள்விகள் பல ,
என்னுள் தோன்றுதடி,
உன்னிடம் கேட்க
ஏனோ சற்று தயக்கம்...

தயக்கத்தின் காரணம்
என்னவோ

இதன் பெயர்
தான் காதலோ...

                சொல்லாத காதலும் சுகமே.....!!!!

Friday, 25 May 2018

வீழ்வோம் என்று நினைத்தாயோ!

கார்ப்ரேட் நிறுவனத்துடன் சேர்ந்து கொண்டு
காசுக்கு கையேந்தி
கோட்பாடுகளை உடைத்தெரிந்து
சுயநலத்துடன் , பிறரை குறை கூறும்,
ஆட்சி அதிகாரம்....

நாட்டின் சேவைக்காக உறுதி மொழி எற்று
பதவி பயனிற்காக,
அரசியலமைப்பின் சட்டத்தை சீர்குலைத்து
ஒதுங்கி நிற்கும்,
திகார வர்கம்...

அதிகார வர்கமும்,
ஆட்சி அதிகாரமும்,
கைகோர்த்து நின்றன,
13 உயிர்கள், மண்ணை விட்டு
மறைந்தன...

                      -   வீழ்வோம் என்று நினைத்தாயோ!

Wednesday, 23 May 2018

பெயர் என்னவோ?

என் கவிதைகள் அனைத்தும்
உயிர் பெற்றதடி..

இதன் காரணம்
என்னவோ?

இதன் பெயர்
தான் காதலோ...!!!

என் காதலும், நீயோ?
நீயே...!!!