Saturday, 25 August 2018

வரம் தருவாய்

இமை சேரும் வரம் தாராய்,
    கருவிழியில் கலந்திட!
விரல் சேரும் வரம்  தாராய்,
    விரல் நடுவே நிலைத்திட!
தேகம் தழுவும் வரம் தாராய்,
    அக அழகை அலங்கரிக்க!
கூந்தல் கூடும் வரம் தாராய்,
     உலரும் வரை மடியாதிருக்க!
பாதம் சேரும் வரம் தாராய்,
     பயணத்தில் நானும் பங்குபெற!
எனை கண்டு நீ மகிழ,
      நான் மகிழ வரம் தாராய்!

                                       வரம் தருவாயாக....
                                                 -- மழை துளி......!!!!

Wednesday, 15 August 2018

மழை..

மழையை ரசிக்க நானும் செல்ல,
சாரல் மகளோ கோபித்து செல்ல,
ஏன் என நான் கேட்க,
உன்னவள் இருக்க,
நான் ஏன்
என்றாள்....

                 --- உன்னவன்!!!!

Sunday, 5 August 2018

நண்பன்...

தந்தை கரம் பிடித்து பள்ளி சென்று- நண்பன்
  தோள் கோர்த்து சுற்றி திரிந்தோம்,
தாய் சமைத்த உணவு எனினும் - நண்பனும்
     உண்டு சுவைக்க ருசித்தோம்,
சமுக வேற்றுமை பல இருப்பினும்- சமம்
     என வளர்ந்து வந்தோம்,
போட்டிகள் புகுத்திய போதிலும்- அதை   
         புலப்படுத்தாது பழகினோம்,
காதல் எதுவென தெறியாது - எனினும்
         காதல் என கருதினோம்,
காலையில் கண்ட சண்டைகள் - மாலையில்
         மறந்து மலர்ந்து சென்றோம்.
நிகழ்வுகளின் நினைவுடன் - நட்புடன்
          நண்பன்.......