Wednesday 21 November 2018

கீதமே....

கன் தேடும் கனவே..
மனம் நாடும் உனையே...

உனை சேர்ந்த நானோ..
எனை மறந்தது ஏனோ..

ஒரு வார்த்தை பதில் தான்
என் வினாவின் வினையா..

சரி எனும் பதில் தான்
புரிதலின் விடையோ

"என்ன  சொன்ன " எனும் வார்த்தை தான்
உள் மனதின் ஆசையோ..

பார்க்காத எனும் சொல் தான்
பெண் மனதின் காதலோ..

என் மனம் சேர்ந்த மங்கையே..
மனதிசையின் கீதமே...

நினைவே....

பச்சை வண்ண உடையில்
பரந்து விரிந்த பொலிவில்
மலை எனும் மனது
காதலெனும் கடலில்
மூழ்கி மறைந்ததடி....

வெள்ளை நிற ரோஜா வே..
வேண்டியது எதுவென்ப தெரிந்தும்
தெரியாது நடிப்பின் நிலையால்
நினைவுகள் வாழுதடி...

சிறு துளிகள்...

இடியின் பிடியில்
உன் மெளனம் கலையட்டும்..

மழைத்துளி யதனை
உன் கரம் ஏற்கட்டும்

உன் வாசம் அதனுள்
மன் வாசம் மடியட்டும்

மின்னலின் ஒளியில்
உன் முகம் மலரட்டும்

உயிர் பிரியா ஈசல்,
அது போல் நம்  காதல்
வாழட்டும்...

Friday 2 November 2018

உன் கெளரவம்..

உடன் பிறந்த உறவு எனினும்,
அவர்களது தருனம் எனில்,
மனம் வருந்தும் செய்கையே..

தன்னலம் பாராத உதவியும்,
அவர்களது நிலையே நியாயம் எனும்
பேசும் தருனத்தில்,
உதாசினப்படும்..

உன் கெளரவம்,
உன் மீதான மறியாதையின் வெளிபாடா?
உனை சார்ந்த அவர்களது தேவையின் வெளிபாடா?

இதன் விடை ,நீ அறியும் தருணம்,
அவர்களது தேவைக்கு,நீ தேவை இல்லை,
எனும் தருணம்...

உனது கோட்பாட்டில் உன் பயணம்

புரிதலே உறவு என உணர்ந்தாலும்,
எதிர் வினை கண்டு வருந்தாதே..
நன்மை என நீ நினைத்தும்,
நம்பகம் இல்லையேல் கலங்காதே..
கடந்தவை நினைவுக்கு சுகமே
எனினும் நிஜத்திற்கு?
உனது கோட்பாட்டில் ,
உன் பயணம் அமையட்டும்..
அதன் உண்மை ,
என்றேனும் விளங்கட்டும்...
உண்மை உணரும் தருணம்,
புரிதல் புரியும் தருணம்....