Friday 8 February 2019

தருணம்

அருகில் நீயும் இருக்க
        மனதும் இருக்கம் கொள்ள
விழிகள் உனையே பார்க்க
        இதழ்கள் தானே சிரிக்க
மனதும் ஏதோ நினைக்க
         நீயும் அதையே சொல்ல
நிகழ்வுகள் கடந்து செல்ல
         நினைவுடன் சேர்த்து கொள்ள
மெளனம் நிலைத்து நிறக
          மழையோ அதை கலைத்து செல்ல
விரல்கள் கோர்த்து கொள்ள
          பயணம் தொடங்கி செல்ல
முடிவிலா பயணம் கேட்க
           இறைவன் அதையே அளிக்க.....

தகப்பன்...

பெற்று தரும் கல்வியும்,
       உன் வாழ்வில் முடிவல்ல..
சேர்த்து வைத்த செல்வமும்
       உன் வாழ்நாள் தேவையல்ல
கற்று தந்த தற்மமும்
       சமுதாய வாழ்வில் பயனல்ல
நீயே என் உலகமடா, அதிலே
       என் வாழ்கை பயணமடா...