Thursday, 30 September 2021

வறுமை

கதிரவன் வெப்பத்தில் பழகிய தேகம், 
சந்திரன் குளிருக்கு ஒவ்வாமல் போனது. 

உழுது விதைத்து வாடிய மனதிற்கு, 
களைப்பாற கருவேல மரமே மிஞ்சியது. 

ஆடு வளர்க்க அடகு வைத்து, 
தண்ணிர் வைக்க தேடி திரிந்து, 
தீராத தாகம், 
வறுமையின் உச்சம். 

நம்பிக்கையின் நன்முகத்தோடு கரம் பிடித்தேன், 
மஞ்சள் கயிற்றின் ஆடம்பரமும், 
சாந்து பொட்டு சீதனமும், 
ஒற்றை கண்ணாடி வளைவி அலங்காரமும், 
வறுமையின் மிச்சம். 

வானம் பார்த்த பூமியை
நீல வானம் பார்க்கும்  வரை, 
வறுமையின்றி 
வேறு வழியில்லை. 

மனது

புரியாத போது
தெளிவான மனது
புரியும் போது
அறியாத மனது

ஆசை மோகம்
ஈர்க்கும் போது
தேவை தேடி 
அரிய மறுக்கும்

சுழ்நிலை மாற்றம் 
நாடும் மனது 
தீர்வு தேடி
அரிய மறுக்கும்