Friday, 27 May 2016

மனதலைகள்

ஆழ்மனதின் ஆசைகளை
கரையோரம் சேர்க்கும் மனதலைகள் ,
மனதலைகள் கரை சென்று விழுமோ?
என் மனதை அழைத்து கொண்டு வருமோ?

தனிமையின் தென்றல்
இனிமையின் இன்பத்திற்காக , வீசும்
சிறு காதல் ஓவியம்…

ஆகாய ஆனந்த கண்ணீரில்
ஆனந்த நடைபயணம்
ஆனந்தத்தில் ஆன்ந்தம்
எனை தொடரும்
உன் காலடிபாதம் .

விழி மூடாமற் பாற்த்திருந்தேன்
விழி திறந்தே தூங்கும் வண்ண மீனகளை
விண் மீனாய் நீ தெரிந்தாய் .

பச்சை மூங்கில் குடிலில்
சிறு வண்டு துளைத்த துளையில்
என் அகம் தொட்ட தேன்நீரை,
பருகிய பூமகளின் முந்தானை.

உயர்ந்த மரங்கள்
உறங்கிய உயிர்கள்
உறைத்திடும் குளிரில்
உயிர்தந்த
உன் சுவாச காற்று.

நிலா முற்றம்
முழு நிலவின் வெளிச்சம்,
உன் இருவிழியின் மிச்சம் .

நான் மட்டும் உரையாடும் கவியில்
கவிக்கு உயிர் சேர்க்கும்
காவியத்திற்காக........

Tuesday, 24 May 2016

அறிவேன் எப்போது

சொற்களை சொக்க வைத்த சுகமே
நிழலாய் தொடரும் நிஜமே
உறக்கத்தின் கனவுகளின் கவியே
இதய துடிப்பை மூச்சுகாற்றால் இசைக்கும் சங்கீதமே
நினைவுகளில்  நிறைந்திருக்கும் நீயே , உன்னை
அறிந்தேன் , அறியேன் நீ யார் என்று ,
அறியேன் இப்போது,
அறிவேன் எப்போது.

Monday, 21 March 2016

விழியின் கதிர்கள்

வென்னிற மனதை
கருநிற விழியில் கண்டு வியந்தேன்,
வியந்ததின் விந்தைகள்
உன் புருவத்தின் புதிர்கள்!
எத்திசையாய் மாறத் துடித்தேன்
உனது  இருவிழி தேடலிற்காக,
மாற்றத்தில் புதைந்தேன்
உன் சுவாசகாற்றில்!!
முழு நிலவின் பிரகாசமாய்
வென்னிற விழியின் கதிர்கள்,
பிரகாசத்தின் மீதான ஏக்கம்
உன் இமையினது  மீதான கோபம் !!!
மௌனத்தின் கவிதையாய்
கண்ணீர் ததும்பிய கண்கள் ,
கவிதையை துண்டிக்க துடிக்கும்
உன் துணைவனது
ஆனந்த சொற்களின் கவிதை.

Thursday, 25 February 2016

வாழ்க்கையின் வழிகாட்டி

என் பசியில் பசியாறியவள் ,
என் சிரிப்பில் சிலிர்த்தவள் ,
என் அழுகையில் அக்கறை கொண்டவள்,
என் சோகத்தை தன்வசம் மாற்றிக்கொண்டவள்,
என் இன்பத்தை இரட்டிப்பாக்கியவள்,
தன் உறக்கத்திலும் என்னை தாலாட்டி
எனது மொழியின் சொற்களாய்,
எனது முன்னேற்றத்தின் முன்னோடியாய்,
 எனது நம்பிக்கையின் நாயகியாய்,
என் வாழ்க்கையின் வழிகாட்டி....


                                                அம்மா...

Thursday, 4 February 2016

உயிருடன் உடலாக......

வாழ்க்கையை வாழ ,
அனுபவம் அவசியம்,
அனுபவத்தை அறிந்தேன்
உன் நட்பில்.

சொந்தங்கள் பலர்,
நண்பர்கள் சிலர்,
மாறினாய் 
என் சொந்தங்களின் சொந்தமாக.

செய்வதறியாது இருந்த பல சூழலில்
உடலுடன் உயிராக இருந்து,
உடலுக்கு உயிர் கொடுத்த
உயிரை வாழ்த்தும் உடல் ......

                           உயிர் மலர்ந்த தினத்தன்று ......
                                     உயிருடன் உடலாக......


     இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்

Sunday, 31 January 2016

மனதும் உயிரும்

கவலைகளை கண்டுகொண்டேன்
ங்கியது கண்கள் ,
மறக்க முயன்றேன்
மலர்ந்தது மனதில் பாரமாய் ,
உதாசித்தேன்
உரைந்தது உயிருடன்.

Wednesday, 20 January 2016

ரசிகன்

என்னவள் மழையை ரசிக்க ,
உன்னவன் என்னவளை ரசிக்க ...
உன் மேல் விழுந்த மழைத்துளி,
தன் பயணத்தை தலை வடுகில் தொடங்கி,
நெற்றியில் பயணித்து குதுகளிக்க,
புருவத்தில் கொஞ்சம் இளைப்பாறி
கண் இமைகளை நெருங்கியது..
அக்கணத்தில் என்னவளது கண் இமைகள் இசைத்திட
அவ்விசையில் துள்ளி குதித்த மழைத்துளி
என் மீது விழுந்து நடணமாடியது
நடணமாடியது மழைத்துளி மட்டும் அல்ல
உன்னவனது இதய துடிப்பும்…..