அரசனே
என் அரசனே
ஆராரோ பாடுகிறேன்
என் அரசனே
என் மடியில் துயிலுறங்கு
இன்பத்தில் நான் திழைக்க
என் அரசனே
உன் புன்னகையில்
என் இதயம் தொடு
ஈகையில் நாம் சிறக்க
என் அரசனே
உன் கரம் கொண்டு
செல்வம் கொடு
உறவு எனும் படை இருக்க
என் அரசனே
படை கொண்டு வென்று எழு
ஊக்கம் உனக்கென வளர்த்து
என் அரசனே
ஊரார் போற்ற வாழ்ந்து காட்டு
எழுந்து நின்றாய் தத்தி தத்தி
என் அரசனே
என் கரம் பிடித்து
நடை பழகு
ஏக்கம் இன்றி வளர்க்கிறேன்
என் அரசனே
ஏழு கடல் கடந்து செல்
ஐயம் கொல்லாதே
என் அரசனே
துணிவுடன் செயல் ஆற்று
ஒழுக்கம் எனும் உணர்வை
என் அரசனே
உயிருடன் கலந்து வாழ்
ஓவியம் போல் ஒரு வாழ்வை
என் அரசனே
நீ பெற
ஓம் எனும் நாமம் நாடு
ஒளவியம் எனும் பண்பு
என் அரசனே
பிறரிடம் பாராதே
No comments:
Post a Comment