பார்த்த கனம் பிடித்து போவதும் காதல்
பிடித்ததை சொல்ல துடிக்கும் தவிப்பும் காதல்..
மௌனமாய் பேசுவதும் காதல்
நினைத்து கொண்டே வாழ்வதும் காதல்..
கண்களால் பேசிக் கொள்வதும் காதல்
கண்ணுக்கு கண்ணாய் பார்த்து கொள்வதும் காதல்..
பிடிவாதம் பிடிப்பதும் காதல்
பிடித்தவர்களுக்கு விட்டு கொடுப்பதும் காதல்..
அதிகாரம் செய்வதும் காதல்
அட்கறை கொள்வதும் காதல்..
தான் நினைப்பதை அவள் சொல்ல நினைப்பதும் காதல்
தாமும் சொல்லாமல் இருப்பதும் காதல்..
பார்க்க துடிப்பதும் காதல்
பார்த்து கொண்டே இருப்பதும் காதல்..
முகத்தில் மலரும் புன்னகையும் காதல்
மனதில் ஏற்படும் படபடப்பும் காதல்..
தன்னிலை மறந்து தவிக்க வைப்பதும் காதல்..
நாம் என்று நினைக்க வைப்பதும் காதல்..
காரணம் அற்ற சிந்தனையும் காதல்
அவன்/அவள் அவளை/வவனை பற்றிய சிந்தனையும் காதல்..
தோல்விகள் அற்றதும் காதல்
தோல்விகளை தோளில் சுமந்து கொள்வதும் காதல்..
காதல்..
மலர்ந்தாலும் காதலால்..
உதிர்ந்தாலும் காதலால்..
மீண்டும் பூப்பதும் காதலால்..
காதலிற்காக..
காதலுடன்...