அன்று,உறவுக்காக பல செயல்கள்
இன்று, உறவிற்கு இடையே பல கேள்விள்
அன்று ,கருத்துக்கள் ஏற்க்கப்பட்டன
இன்று,கருத்துக்கள் கலைக்கப்பட்டன
அன்று, அனைத்து விஷயங்களிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது
இன்று, அந்த உறவிற்கே விலக்கு அளிக்கப்பட்டது
அன்று, ஒன்றாய் விளையாடிய உறவுகள்
இன்று, உறவின் வாழ்வியலுக்கு பின்னால் விளையாடி பார்க்கிறார்கள்
அன்று, பேச நேரம் போதவில்லை என்று தோன்றியது
இன்று, பேச கூட நேரம் இல்லை என்ற நிலை தோன்றிவிட்டது
இன்று, இதை ஏற்காத மனது
நாளை,இதை ஏற்குமோ??
பகுத்தறிவு வேண்டாம் என்கின்றது,
மனதின் மூடத்தனம் வேண்டூம் என்கின்றது..
அன்று ,சிறியதாய் ஏற்பட்ட பிளவு
இன்று,வான் தூரம் வளர்ந்து நிற்கின்றது
வான் தூரம் பயணிக்க மனது முயல்கிறது,
ஏனோ,பயன வழி படிகள் அற்ற ஏனி படிகளாய் போனது..
முட்டாள் மனதின்.....
வேடிக்கை வழக்கு .....
பகுத்தறிவிடம் வைக்கப்பட்டது!!!
போதிய வாழ்க்கை அனுபவம் இல்லாததால்,
முட்டாள் மனதின் வியாக்கான வழக்கு
ஒத்திவைக்கப்பட்டது!!!!!!
!!!!!!உறவு ஒடுக்கப்படுகிறது என்று அறியாத மூடற்கள்!!!!!!!
வாழ்க்கையின் மீதான பசி ஏற்ப்படும் போது,
வழக்கு மீண்டும் விசரிக்கப்படும்....
பகுத்தறிவு அற்ற..
முட்டாள் மனது...!!!!