Tuesday, 4 July 2017

காதல் கிரகம் தேடி

தோழியில்லா பயணம்..!!

சாலை ஓரம் மரங்கள்
என்னுடன் பயணிக்க விருப்பம்  இன்றி
பின்னே செல்ல..

சாலைப்புறம் பூங்கொத்துக்கள்
பூமகள் மனம் வீசாததால்
தலைகனத்துடன் பூத்துகுலுங்க ..

வீதியீன் ஏற்ற தாழ்வுகள்
உனை சுமக்காத வேதனையை
என் மீது பாய்ச்ச..

கன்னிமைத்து ஜாலம் காட்டி ,
முந்தி செல்லும் வாகனங்கள்
பார்வை மங்கி ஒன்றன் பின் ஒன்று
ஊர்ந்து செல்ல..

பூலோகம் பயணிக்க விருப்பமற்ற
பூமழை
வான் உலகில் கரூமேகமாய் நிலைத்து நிற்க..

என் மனம் மட்டும் உன்னை தேடி
காதல் கிரகம் தேடி
பயணிக்கின்றது...!!!

2 comments: