Wednesday, 22 November 2017

நீ வருவாய்......

உன்னை பார்த்தகனம் ஏனோ ஒரு மாற்றம்
மாற்றத்தின் புரிதல் அறியாமல்
கழிந்தன சில நாட்கள் ...

புரிதலின் காதலுடன்
வளர்ந்தன சில நாட்கள்...

என்னுல் வளர்ந்த காதலை
சொல்ல துடித்தன சில நாட்கள்....

என் செயல்களின் அர்த்தம்
நீ அறிவாயோ இல்லையோ
என்ற சந்தேகத்துடன் சில நாட்கள்....

அதை அறிய கூறினேன்
என் காதலை,
உன்னிடம்.....!

உன் செய்கையால்
செயலிழந்து நின்றன என் கண்கள்
உன்னை விட்டு அகலாமல்..!!!

பதில் ஏதும் கூறாமல்
விலகி சென்றாய்....

உன் கண்களில் கண்டேன்
என் மீதான காதல்...!!!!

விலகி விலகி சென்றாலும்,
நெருங்கி நெருங்கி வந்தேன்,
உன் மீதான காதலால்.....

என்னுடன் பேச மாட்டாயோ
என்று ஏங்கி தவித்த என் நாட்கள்,
நீ கூறிய அந்த வார்த்தையால்
நிலைகுலைந்து போனது.....

உன் கண்களில் கண்டேன்
நம் காதலை.!!!!!!

நிலைகுலைந்த நாட்களை
நினைவாக மாற்ற
நீ வருவாய் .......

No comments:

Post a Comment