Tuesday, 16 January 2018

அப்பா

அன்பு எனும் சொல் -
        அதற்க்கு உயிர் கொடுத்தாய் !
ஆசை எனும் விந்தை -
        அதில் வியக்க வைத்தாய் !
இறக்கம் எனும் குணம் -
        பகைவரிடத்தும் காட்டினாய் !
ஈகை எனும் ஈசல் -
        சாகா வரம் பெற்றாய் !
உறவு எனும் பந்தம் -
        ஊரார் அறிய செய்தாய் !
ஊக்கம் எனும் செயல் -
       தன்னம்பிக்ககையால் தன்வசமாக்கினாய் !
எழுச்சி எனும் வளர்ச்சி -
        உழைப்பால் அடைந்தாய் !
ஏக்கம் எனும் நினைவு -
        அறியாமல் வளர்த்தாய் !
ஐ எனும் அழகு -
        வாழ்வாய் மாற்றினாய் !
ஒழுக்கம் எனும் உணர்வு -
        வாழ்ந்து காட்டினாய் !
ஓய்வு எனும் வேலை -
        உறக்கத்தில் உணர்ந்தாய் !
ஒளவியம் எனும் பன்பு -
        பிறரிடம் பாராமல் நடந்தாய் !

                                                                    -  அப்பா

      
       

No comments:

Post a Comment