Monday, 26 February 2018

மாற்றம் ஒன்றே மாறாதது - 5

காதல் , கனவு, நட்பு ,உறவு, உணவு
எனும் தேடலில்,
ஒரு சிலர் சேரும் நிலையத்தை அடைகிறார்கள்,
சிலர் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்,
பலர் வேறு நிலையத்தை அடைகிறார்கள்..

அடைந்த நிலையமே தன் வாழ்வென கருதி,
வாழும் பலரது வாழ்க்கை பயணம்,
தடம் புரலுமா?
தடத்தில் பயணிக்குமா?

இலக்கை நோக்கிய பயணத்தில்,
இடையூறுகளை கடந்து செல்வது,
மதியின் பிடியிலா?
விதியின் பிடியிலா?

மாற்றம் ஒன்றே மாறாதது.......

Wednesday, 14 February 2018

Love you kd..

Won't be get tensed in any situation at any point of time....in my life from now.....
Not sure if i could do this to the fullest ..
I hope i will do this ....

This is for you....this is because of you....
I love you....

I want you to be happy...
I know you will be happy by doing this...

I am feeling happy for doing this for you.. 
I believe this would help me in my life as well...
Love you kd....

Wednesday, 7 February 2018

காதல்..!

உனக்கென நான்,
எனக்கென நீ....

உனக்கென கண்ணீர் விட்ட நாட்கள் கடந்து,
உன் நினைவில் கண்ணீர் விடும் நாட்கள்.....

உரையாடல் வாழ்வென கருதிய மனது,
விவாதத்தில் முடிவதேனோ.....

வாழ்வில் கலந்த உறவில்,
காலம் செய்யும் மாற்றம் ஏனோ..

நிழலாய் நகர்ந்த நட்பு,
நினைவில் தவிப்பதேனோ.....

மறக்க தெறியாத மனது,
உனையே நாடுவ தேனோ...
இது தான் காதலோ...!!!!!

Tuesday, 6 February 2018

மாற்றம் ஒன்றே மாறாதது-4

தனக்கு கிடைக்காத வாய்ப்பை,தன்
தலைமுறைக்கு ஏற்படுத்தி தர,
நித்திரையில் மட்டும் அல்லாது,
நம்பிக்கை கனவுடன்!
கன நொடியும் வாழ்வை நகர்த்தி செல்லும்,
ஒரு தலைமுறையின்
முன்னோடி...!

தனக்கு பிடித்தும் பிடிக்காமலும்,
தன் பெற்றோர்களின் கண்டிப்பிலும்,
தன் விளையாட்டை துலைத்து,
தன் கலையை துலைத்து,
வாழ்வென கருதாமல்
கடமை என கருதி
வாழ்வை நகர்த்தி செல்லும்,
எதிர்கால தலைமுறை...!!!

கடந்த காலம் வெல்லுமா?
எதிர் காலம் வெல்லுமா?
நிகழ்கால போராட்டத்தில்.......

மாற்றம் ஒன்றே மாறாதது.......!!!!