Monday, 26 February 2018

மாற்றம் ஒன்றே மாறாதது - 5

காதல் , கனவு, நட்பு ,உறவு, உணவு
எனும் தேடலில்,
ஒரு சிலர் சேரும் நிலையத்தை அடைகிறார்கள்,
சிலர் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்,
பலர் வேறு நிலையத்தை அடைகிறார்கள்..

அடைந்த நிலையமே தன் வாழ்வென கருதி,
வாழும் பலரது வாழ்க்கை பயணம்,
தடம் புரலுமா?
தடத்தில் பயணிக்குமா?

இலக்கை நோக்கிய பயணத்தில்,
இடையூறுகளை கடந்து செல்வது,
மதியின் பிடியிலா?
விதியின் பிடியிலா?

மாற்றம் ஒன்றே மாறாதது.......

No comments:

Post a Comment