அனைவர்க்கும் இசைபடும் வாழ்வும் இல்லை,
அனைவர்க்கும் தீமை செய்ய வாழ்வும் இல்லை
PASHOGUS
Sunday, 27 July 2025
Wednesday, 13 December 2023
கால மாற்றம்
அரசியல் பழகிகொள்
அதிகார வலிமை அறிந்துகொள்
இன்பம் தழைத்து நிற்கும்
இடையூரும் இணைந்து நிற்கும்
சூழ்நிலையின் கால மாற்றம்
மனிதர்களின் எண்ணங்களை மாற்றும்
கிடைத்ததை ஏற்றுக்கொள்
கிடைகாதவை நமக்கில்லையன அறிந்துகொள்
எதிர்பாராத உதவிகள் கிட்டும்
வாழ்நாள் முட்டும் நிலைக்கும்
நன்றி மறவாதே
வாழ்கை நிலைக்காதே
மனம் ஏற்க மறுக்கும்
ஏற்றால் வாழ்கை சிறக்கும்
Saturday, 1 July 2023
கடவுளின் சித்தம்
அரியாமல் நிகழவில்லை - அதை
நான் அறிவேன்
ஆறுதல் பேசி பயனில்லை -
பயன் அறிந்ததே
இன்னல்கள் இருப்பினும் - அவை
கணிக்கட்டவையே
கணிப்புகள் கை மீறியதா? -
கடவுளின் சித்தம்!!
Tuesday, 5 October 2021
அலையோசை
உன் தலை கோத துடித்தேன்,
பாதம் சேர பாய்ந்தேன்,
என் தவம் அறியா தாய்மை
உனை தூக்கிச் செல்ல!
கரை தொட்டு மடிந்தேன்
மழலை செல்லமே.!
Thursday, 30 September 2021
வறுமை
கதிரவன் வெப்பத்தில் பழகிய தேகம்,
சந்திரன் குளிருக்கு ஒவ்வாமல் போனது.
உழுது விதைத்து வாடிய மனதிற்கு,
களைப்பாற கருவேல மரமே மிஞ்சியது.
ஆடு வளர்க்க அடகு வைத்து,
தண்ணிர் வைக்க தேடி திரிந்து,
தீராத தாகம்,
வறுமையின் உச்சம்.
நம்பிக்கையின் நன்முகத்தோடு கரம் பிடித்தேன்,
மஞ்சள் கயிற்றின் ஆடம்பரமும்,
சாந்து பொட்டு சீதனமும்,
ஒற்றை கண்ணாடி வளைவி அலங்காரமும்,
வறுமையின் மிச்சம்.
வானம் பார்த்த பூமியை
நீல வானம் பார்க்கும் வரை,
வறுமையின்றி
வேறு வழியில்லை.
மனது
புரியாத போது
தெளிவான மனது
புரியும் போது
அறியாத மனது
ஆசை மோகம்
ஈர்க்கும் போது
தேவை தேடி
அரிய மறுக்கும்
சுழ்நிலை மாற்றம்
நாடும் மனது
தீர்வு தேடி
அரிய மறுக்கும்
Tuesday, 4 June 2019
❤️
நினைவுகள் எனும் மலர் எடுத்து,
காலம் எனும் நார் கொண்டு,
காதல் எனும் மாலை தொடுத்து,
உன்னிடம் சேர்த்தேன்
என் உயிரே. ....
காலங்கள் கடந்து செல்ல,
நினைவுகள் பூத்துக் குலுங்க
காதல் மாலை நீலுமம்மா..
நீலும் காதலை,
சேர்த்து அனைக்க,
என் கரம் உனை சேருமம்மா..
Subscribe to:
Comments (Atom)