Tuesday 16 January 2018

அப்பா

அன்பு எனும் சொல் -
        அதற்க்கு உயிர் கொடுத்தாய் !
ஆசை எனும் விந்தை -
        அதில் வியக்க வைத்தாய் !
இறக்கம் எனும் குணம் -
        பகைவரிடத்தும் காட்டினாய் !
ஈகை எனும் ஈசல் -
        சாகா வரம் பெற்றாய் !
உறவு எனும் பந்தம் -
        ஊரார் அறிய செய்தாய் !
ஊக்கம் எனும் செயல் -
       தன்னம்பிக்ககையால் தன்வசமாக்கினாய் !
எழுச்சி எனும் வளர்ச்சி -
        உழைப்பால் அடைந்தாய் !
ஏக்கம் எனும் நினைவு -
        அறியாமல் வளர்த்தாய் !
ஐ எனும் அழகு -
        வாழ்வாய் மாற்றினாய் !
ஒழுக்கம் எனும் உணர்வு -
        வாழ்ந்து காட்டினாய் !
ஓய்வு எனும் வேலை -
        உறக்கத்தில் உணர்ந்தாய் !
ஒளவியம் எனும் பன்பு -
        பிறரிடம் பாராமல் நடந்தாய் !

                                                                    -  அப்பா

      
       

Friday 12 January 2018

மாற்றம் ஒன்றே மாறாதது-3

இரு விழிகள் எதிரெதிரே,
இரு உயிர்கள் அருகருகே,
இரு கரம் கோர்த்து
தோளோடு தோள் சாய்ந்து,
காதல் மலருமா என்ற ஏக்கத்துடன்
சமுதாய வழிப்போக்கர்களை கருத்தில் கொள்ளாமல்,
உயிரின் உணர்வுக்கு மதிப்பளித்து
ஏக்கத்துடன் ஒரு பயணம்....

வளர்த்தவர்களுக்கு விரும்பமில்லை
விரும்பியவர்கள் வீதியிலே,

சொர்க்கம் எனும் வீடு நரகமாய்.
நரகம் எனும் வீதி சொர்க்கமாய்...
சொர்க்கம் விட்டு சொர்கம் சென்ற
வளர்ந்தவர்கள்....!!!!

பாசத்தின் பிரிவிலும்,
சமுதாய சலனத்திலும்,
வளர்தவர்கள்...!!!!!

மாற்றம் ஒன்றே மாறாதது..
வளர்தவரிடத்திலும்....!!
வளர்ந்தவரிடத்திலும்!!!!!

பயணம் தொடரும்....!!!!

Thursday 11 January 2018

மாற்றம் ஒன்றே மாறாதது-2

எவருக்கும் எளிதில் கிடைத்திடாத திறம்
மனதை உருக்கும் இசை,
கருமை நிற ஒளியில்
உணர்வுகளில் உயிர் வாழும்
உள்ளங்கள்!!!
சமுதாய பார்வையில் பார்வை அற்றவர்கள்!!!
இது வாழ்வின் பயனா!
விதியின் செயலா!!

பயணத்தின் ஒரு பகுதி.....

மாற்றம் ஒன்றே மாறாதது......!!!
பயணம் தொடரும்!!!!

Tuesday 9 January 2018

மாற்றம் ஒன்றே மாறாதது

ஒரு வேலை உணவிற்காக
வயது வரம்பு பாராமல்,
ஆண் பெண் பாராமல்,
சில உதவும் உள்ளங்களையும்!
பல முக பாவனைகளையும்!!
தினம் தினம் எதிர்கொள்ளும்,
உறவுகளால் கைவிடப்பட்ட
உள்ளங்கள்......

இவர்களின் நிலை இதுவென...
இவர்களை வீதியில் விட்டவர்களின் நிலை??

ரயில் பயணத்தின் ஒரு பகுதி............

Friday 5 January 2018

என்று..

கணவாய் இன்று,
நினைவாய் என்று.

நிழலாய் இன்று,
நிஜமாய் என்று.

தொலைவில் இன்று,
அருகில் என்று.

மொழியாய் இன்று,
உயிராய் என்று....

Wednesday 3 January 2018

சம்மதம்....

விரலோடு விரல் கோர்த்து
இமையோடு இமை சேர்த்து
மனதோடு மனம் சேர்க்கும்
மெளனம் சம்மதம்.

Monday 1 January 2018

புரிதல்.....

தனக்கென வாழ்பவன்
பிறரை இழ்க்கிறான்,
பிறர்கென வாழ்பவன்
தன்னையே இழக்கிறான்!!!!!

தன்னை இழத்தலும் சுகமே
பிறரின்  புரிதலில்,
தன்னை இழந்தும் துன்பமே
பிறரின் .............!!!!!!!

சமுதாயத்துடன் வாழ்,
என்ற முட்டாள் தனத்துக்கு கிடைத்த வெகுமதி,
வாழ்க்கையின் மீதான பயம்...