Friday, 13 July 2018

பெண்மை....!!!

ஆகாயம் விழித்திட - அவளை
இவள் வரவேற்றிட,

சுள்ளிகள் சேர்த்து,  வெந்நீர் எடுத்து - செல்வ
செல்விகளை சீராட்டி,
எட்டாக் கனியாய் கல்வி பயில - பள்ளி
சென்று சேர்த்து,

தான் வாடினால் கேட்பாரில்லை எனினும் - பூ
வாடினால் பனம் இல்லையேல் என்பதனால்,
குடை கீழ் அமர்ந்து - வேலை
பார்த்து,

மொழம் அளந்து ஜான் விட்டு - விற்று
சேர்த்த பனம்,
தண்ணீர் பருகி , உணவு தவிர்த்து - விரியம்
ஆகாமல் சேர்த்து,

வரவேற்ற சூரியனோ வீடு திரும்ப - நிலவயும்
வரவேற்க காத்துகிடந்து,

தெரு விளக்கோ கன்சிமிட்டிட - கவனம்
குன்றாது பூக்களை கோர்த்து எடுத்து,

விருந்தோம்பலாய் கருனையுடன் - இவளை குளிர்விக்க மழை பொழிய,
இதை அறியாதவள் - பூக்கள்
அழுகாது சேர்த்து எடுத்து வீடு திரும்பினால்,

மறுதினம் சூரியனை
வரவேற்றிட..

                                                    - பெண்மை...

2 comments: