Saturday, 8 August 2015

மௌனத்தின் மொழி

காதல்,
இரு கண்கள் 
பேசும் மொழி.

இதன் மொழியை !
சொற்களை கோர்த்து
வார்தைகளாக பேச  முயன்றேன்,
பின்பு  முயன்றதில் அறிந்தேன் ,
அது மௌனத்தின் மொழி என்று .

மௌனத்தை தேடினேன்,
தேடியதில் தெரிந்து கொண்டேன்
மௌனத்தின் மொழியை,
மௌனத்துடன் கலந்து தான்
பெற முடியும் என்று .

மௌனத்துடன் கலந்தேன்,
கலந்ததில் கறைந்தேன்,

என்னவள் இதய கடலில்.....!!!!!!!!!!!!

No comments:

Post a Comment